பார்க்கவ மகரிஷிக்கும், கனகாங்கிக்கும் பிண்டாகாரமாய், அதாவது, ஒரு மனித உருவில் இருக்கும் கைகள், கால்கள், கண், காது, மூக்கு போன்ற உறுப்புகள் எதுவுமின்றி ஒரு குழந்தை பிறந்தது. இப்படி உருவம் எதுவுமின்றி, உருண்டையான வடிவத்தில் ஒன்று தனது கர்ப்பத்திலிருந்து வெளிவந்ததை எண்ணி கனகாங்கி மனம் வெறுத்து அதனை ஒரு புதரில் வீசி எறிந்துவிட்டுச் சென்றாள்; அவள் செய்கையால் வருத்தமுற்ற பார்க்கவரும் மீண்டும் தவம் செய்யச் சென்றார். இப்படி புதரில் வீசப்பட்ட அந்த உருண்டையான பிண்டமே, ஒரு மனித உருவமாய் மாறியது; அதுவே, உலகம் போற்றும் "திருமழிசை ஆழ்வார்" என்ற திருநாமத்துடன் பின்னர் விளங்கியது. இது எப்படி சாத்தியமானது?
இப்படி, பெற்ற தாயும் தந்தையும் கைவிட, புதரிலே வீசி எறியப்பட்ட குழந்தை என்ன செய்யும்? இதைக் கண்டு அனுதாபப்பட்ட ஜெகந்நாதப் பெருமான், தானும் தன் தேவியுமாய் (ஸ்ரீமஹாலக்ஷ்மி) வந்து, இந்தக் குழந்தைக்குத் தேவையான உபசாரங்களை எல்லாம் செய்து, அதாவது, பாலையும் கொடுத்து, தாரண போஷக போக்கியங்கள் (உறுப்புகளுக்குத் தேவையான சக்தி, ஆத்மாவுக்குத் தேவையான ஞானம்) ஆகிய எல்லாவற்றையும் புகட்டி, அந்தக் குழந்தையும் ஒரு உருவத்தை அடையும்படி அருள் செய்து, அதற்கு உயிர்கொடுத்து, அந்த இடத்தைவிட்டு அகன்றான்.
இதன்பின்னர், அந்தப் பக்கமாக வந்தான் திருவாளன் என்பவன். இவன் பிரம்பறுத்து ஜீவிப்பவன். அதாவது, பிரம்புகளை அறுத்து, வியாபாரம் செய்து, உயிர் வாழ்பவன். வெகு நாட்களாக அவனுக்குப் குழந்தைப்பேறு இல்லை. அதனால், இந்தக் குழந்தையைப் பார்த்தவுடன், யாருமில்லாமல் அந்தக் குழந்தை அனாதையாகக் கிடக்க, அனாதையான இந்தக் குழந்தையை நாம்தான் எடுத்துக்கொண்டுபோய் வளர்ப்போமே என்று நல்லெண்ணம் கொண்டு நேரே தன் இல்லத்திற்குச் சென்று தன் மனைவியிடம் விவரங்களைக் கூறி, பங்கயச்செல்வி என்னும் பெயர்கொண்ட அவன் மனைவியிடம் கொடுக்க, அவளுக்கு அதுவரை குழந்தைப்பேறே இல்லாமல் இருந்ததால் மிகவும் மகிழ்ந்து அந்தக் குழந்தையை ஏற்றுக்கொண்டாள். குழந்தைப்பேறு இல்லாவிடினும் அவள் முலைகளில் பால் தானாகச் சுரந்தது. அப்படி அவளிடத்தில் பால் சுரந்தது எப்படி என்றால், தெய்வ அனுக்ரஹத்தால் (அருளால்) இந்தக் குழந்தை குடிப்பதற்காகவே என்பதாய் இருந்தது. அவள் வயிற்றில் பிறக்காத குழந்தையாய் இருந்தாலும் அவளிடத்தில் பால் சுரந்ததை இந்தக் குழந்தைக் குடித்ததோ என்றால், அது ஒரு துளியும் அந்தப் பாலை அருந்தவில்லை. ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமான் தன் தேவியுடன் வந்து, இதற்கு முதலில் ஞானப்பால் கொடுத்தான் அல்லவா? அதைக் கொண்டே இந்தக் குழந்தை நன்கு வளர்ந்து வந்தது. அதனால், பெறாத தாயான பங்கயச் செல்வி கொடுத்த பாலை இது ஒருநாளும் குடித்தது கிடையாது. இப்படி பெருமான் கொடுத்த ஞானப்பால் உண்டதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளார்ந்துவர, தன் ஏழே வயதில், கற்கவேண்டியது அத்தனையையும் இந்தக் குழந்தை. கற்றது. ஏழே வயதில் அஷ்ட மஹாஸித்தி - அதாவது, என்னென்ன ஸித்திகள் எல்லாம் உலகத்தில் கிடைக்கவேண்டுமோ, அத்தனையும் இந்தக் குழந்தை பெற்றது .
அடுத்து 700, 700, 700 என்று மூன்று 700 ஆண்டுகள் மூன்று இடங்களிலே வாழ்ந்திருக்கிறார் திருமழிசை ஆழ்வார். அவர் இப்புவியிலே இருந்தது 4700 ஆண்டுகள். அதிலே துவாபர யுகத்திலே 1100 ஆண்டுகளும், கலியுகத்திலே 3600 ஆண்டுகளுமாக, இப்படி பிரித்து வாழ்ந்திருக்கிறார் என்று வைணவ ஆசாரியர்கள் அருளிச்செய்த "பன்னீராயிரப்படி" வியாக்யானம் தெரிவிக்கிறது. இப்படி 3600 ஆண்டுகள் கலியுகத்திலேயும், 1100 ஆண்டுகள் துவாபர யுகத்திலேயும் வாழ்ந்தார் என்று பார்த்தோம் அல்லவா? துவாபர யுகத்தில் வாழ்ந்த 1100 ஆண்டுகளில் இவர் சுமார் 1000 ஆண்டுகள் பிற மதங்களில் வாழ்ந்திருக்கிறார்; 99 ஆண்டுகள், அதாவது, துவாபர யுகத்திலேயே 99 ஆண்டுகள் வைஷ்ணவராக வாழ்ந்திருக்கிறார் என்று "பன்னீராயிரப்படி" தெரிவிக்கிறது. மீதம் உள்ள 3601ஆண்டுகளும் இவர் கலியுகத்திலே வைஷ்ணவராகவே வாழ்ந்திருக்கிறார்.
முதலாழ்வார்கள் என்று வழங்கப்படும் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் அவதரித்துஎம்பெருமானே உபயவிபூதிநாதன் - அதாவது, இந்த (கீழ்) உலகத்துக்கும் சரி; மேல் உலகங்களுக்கும் (சொர்க்க லோகம், திருப்பாற்கடல், பரமபதம்) சரி; பகவான் விஷ்ணுவே அனைத்துக்கும் அதிபதியாக இருக்கிறார் என்றும், அவனே ஸ்ரீயப்பதி (திருமகள் நாதன்) என்றும், முழுமுதற்கடவுள் என்றால் அது ஸ்ரீமந் நாராயணனே என்றும் உலகத்தாருக்கு உணர்த்தி, தாங்கள் அவதரித்த நோக்கத்தைச் செவ்வனேநிறைவேற்றினர். ஸாத்வ ஸத்வ குணத்துடனேயே இருந்து, ஸ்ரீமந் நாராயணனே முழுமுதற்கடவுள் என்றுபிறந்தநாள் முதல் பரமபதத்திற்க்குச் சென்றநாள் வரை அதை மட்டுமே பேசினவர்கள் முதல்மூன்று ஆழ்வார்களும். இன்றைக்கு சிலபேர் முதல் மூன்று ஆழ்வார்கள் சமதர்மக் கொள்கையுடனே இருந்தார்கள்;எம்மதமும் சம்மதம்; ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றெல்லாம் இருந்தார்கள் என்று அறியாத சிலபேர்கள் பேசலாம்; ஆனால், அந்த மூன்று ஆழ்வார்கள்தான் சந்தேகமின்றி வைஷ்ணவர்களாகஇருந்திருக்கிறார்கள்.
(முக்கியமாக அறியப்பவேண்டிய ஒன்று) : "வைஷ்ணவர்கள்" என்றால் அது ஒரு சாதியையோ, மதத்தையோ, சமயத்தையோ குறிக்கும் சொல் அல்ல. "வைஷ்ணவர்கள்" என்றால் பகவான் விஷ்ணு ஒருவருக்கே அடிமைப்பட்டவர்கள் என்று அர்த்தம். அதாவது, வேறு எவரையும் தெய்வம் என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்று அர்த்தம். "வைஷ்ணவர்" என்பது செய்கையால், அதாவது, பகவான் என்றால் அது "விஷ்ணு ஒருவரே" என்று இருக்கும் நடத்தையால், ஒருவருக்குக் கிடைக்கும் பெருமையே தவிர, அது ஒரு சாதியைக் குறிக்கும் விஷயமல்ல. பிறப்பால், குலத்தால், எவரும் வைஷ்ணவர் ஆகமுடியாது; செய்கையால் மட்டுமே ஆக முடியும். வேதங்கள் உரைத்தபடி நடப்பவனே பிராமணன் ஆவான்; ப்ரம்மம் உரைத்த வேதங்கள் படி வாழ்பவனே பிராமணன் ஆவான். வேதங்கள் எதை உரைத்தது என்றால், விஷ்ணுவே முழுமுதற்கடவுள் என்று உரைத்து, அவர்க்கே அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்றது. வேதத்தை உரைத்தது பரப்ரும்மமான விஷ்ணுவே ஆவார். "நாராயண பரப்ரும்ம தத்வம் நாராயண: பர:" (நாராயண ஸுக்தம்) என்பது உபநிஷத் வாக்கியமாகும் இதன் அர்த்தம் "நாராயணனே பரம்பொருள், அதாவது, முழுமுதற்கடவுள்" என்பதாகும். தானே பரம்பொருள் என்பதை பகவான் கிருஷ்ணரும் இதை கீதையின் பதினொன்றாவது அத்தியாயத்தில் ("விச்வரூபதர்சன யோகா") நன்கு அறிவித்துள்ளார். கண்ணன் வேறல்ல; விஷ்ணு வேறல்ல. உலகோரைத் திருத்த, சாதுக்களை இரட்சிக்க, தர்மத்தை நிலைநாட்ட, கண்ணானாக அவதரித்தவரே விஷ்ணு. அப்படிப்பட்ட உயர்ந்த தெய்வமான விஷ்ணு ஒருவருக்கே அடிமைப்பட்டு, அவர் புகழைப் பாடுவதையே பொழுதுபோக்காகக் கொண்டு வாழ்பவரே "வைஷ்ணவர்" என்று போற்றப்படுகிறார். ஆழ்வார்கள் அனைவரும் இதைச் செவ்வனே செய்தனர்.
"பாடிலும் நின் புகழே பாடுவன்" என்று "முதல் திருவந்தாதியில்" பொய்கை ஆழ்வாரும், "மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும் மகிழ்ந்தது உன் பாதமே போற்றி" என்று "இரண்டாம் திருவந்தாதியில்" பூதத்தாழ்வாரும், "கண்ணனையே காண்க நம் கண்" என்று மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வாரும் பாடியுள்ளனர். Please note the stress made by these three Azhwars here such as: "நின் புகழே", "உன் பாதமே" and "கண்ணனையே". Lord Krishna himself expresses his supremacy in Sri Bagawad Geetha such as "MAmEgam Charanam Vraja:" (Meaning: Surrender to "myself" only. The stress is made on the syllable "ஏ" through which HE tells that there is neither second God or an equal one to him). இதன் மூலம் அவர்கள் வெளிப்படுத்தியது தாங்கள் விஷ்ணு ஒருவருக்கே அடிமைப்பட்டவர்கள் என்பதாகும். இப்படிப்பட்டவர்களே "வைஷ்ணவர்கள்" என்று போற்றப்படுகிறார்கள். மேலும், பகவான் விஷ்ணுவின் மங்களமான அருளைப் பெற்ற இவர்கள் "ஸ்ரீவைஷ்ணவர்கள்" என்று போற்றப்படுகிறார்கள். "ஸ்ரீ" என்றால் செல்வம் என்று அர்த்தம். திருமால் என்னும் செல்வத்தை நிரம்பப் பெற்றவர்கள் "ஸ்ரீவைஷ்ணவர்கள்" என்று போற்றப்படுகிறார்கள்.
அப்படியே சிலர் சந்தேகப்படவேண்டும் என்றால், ஒருவேளை திருமழிசை ஆழ்வாரை சந்தேகப் பட்டாலும்படலாமே தவிர, முதலாழ்வார்களைப் பற்றி சந்தேகமே பட வேண்டாம். ஆனால், தன் நாக்கிலே கத்தியைவைத்துக்கொண்டு பேசியதால், இன்றைக்கு யாரும் திருமழிசை ஆழ்வாரைப் பற்றி தைர்யமாகத் தவறாக எதுவும்பேசுவதில்லை; அவரைப் பற்றி சொல்வதற்கு யாருக்கும் தைரியமும் வருவதில்லை; ஏதோ ஸத்வ குணத்தோடேபேசினதால், இந்த முதல் மூன்று ஆழ்வார்களைப் பற்றி, ஏதோ இவர்கள் சமதர்மத்துடன் "ஒன்றே குலம் ஒருவனேதேவன்" என்று பேசியிருக்கிறார்கள் என்று சொல்வதில் துளியும் அர்த்தம் கிடையாது. அது இல்லை என்றுசொல்வதற்காகவே திருமழிசை ஆழ்வாரின் அற்புத அவதாரம் ஏற்பட்டது. தை மாதத்திலே, மக நக்ஷத்திரத்திலே மஹீசாரம் என்று வழங்கப்படுகிற திவ்யக்ஷேத்ரத்திலே தோன்றினார் திருமழிசை ஆழ்வார். இவருக்கு "உறையில் இடாதவர்" என்ற ஒரு திருநாமும் (பெயர்) உண்டு.
1000 ஆண்டுகள் ஆழ்வார் பிற மதங்களில் வாழ்ந்திருக்கிறார். 1000 ஆண்டுகளிலே, இவர் தெரிந்துகொண்டது என்ன?
"சாக்கியம் கற்றோம் சமணமும் கற்றோம் அச் சங்கரனார்
ஆக்கிய ஆகமநூலும் ஆராய்ந்தோம்" என்று உரைத்தார்.
அதாவது, "ஜைனம்" என்னும் சமணத்தைக் கற்றேன்- பயனில்லை; பௌத்தத்தைக் கற்றேன் பயனில்லை; சைவம் கற்றேன் - அதிலும் பயனில்லை. இந்த மூன்று வார்த்தைகளைச் சொல்ல, 1000 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்ஆழ்வார். சமண பௌத்த சமயங்களில் வாழ்ந்து, அவற்றை ஆராய்ந்து, காணவேண்டிய வஸ்து அதில் கிடைக்காது, பின்னர் சைவ மதத்தில் புகுந்து, சிவ வாக்கியராய் இருந்து சிவனைப் போற்றித் துதிகள் பாடி, அதிலும் தான் காணவேண்டிய வஸ்து கிடைக்காமல், பின்னர் பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, எம்பெருமானே பரதெய்வம் என்று உணர்த்தப்பெற்று, வைஷ்ணவரானார் . பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, இப்படி வைஷ்ணவரான பின் தான் காணவேண்டிய வஸ்து, அதாவது, எம்பெருமான் என்னும் அமுதம் கிடைக்கப் பெற்றதை,
"பாக்கியத்தால் செங்கட்கரியானைச் சேர்ந்துயாம் தீதிலோம்
எங்கட்கு அறியதொன்றுமில" என்று உரைத்தார்.
அதாவது, நான் செய்த பாக்கியமாக கருத்த மேனியும், தாமரைபோன்ற சிவந்த கண்களையும் உடைய எம்பெருமானை அடைந்தபின், பிற மதங்களில் இருந்த தீமைகள் (பாவங்கள்) அழியப்பெற்று, எம்பெருமான் என்னும் உயர்ந்த வஸ்துவைப் பெற்றபின், இனி தான் அடையவேண்டியது ஒன்றுமில்லை என்று தெரிவிக்கிறார்
இதனை உணர்த்தும் வண்ணமே, இவர், "நான்முகன் திருவந்தாதி"யில் (பாசுரம் 6)
"அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் - வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே ஆதலால் இன்று" என்று பாடினார்.
பாசுர விளக்கம்: "சமணர்கள் (ஜைனர்கள்) உண்மையை அறியமாட்டார்கள்; பவுத்தர்கள் பிரமித்தார்கள். சொல்லப்போனால், மிகவும் தாழ்ந்தவர்கள் சைவர்களாவர்! ஏனென்றால், வாசனையே வடிவெடுத்தவனும், அடியார்களிடம் அன்புடையவனும், திருமகள் (மகாலட்சுமி) சொல்படி கேட்பவனுமான திருமாலை (நாராயணனை) துதிக்கமாட்டாதவர்களாய் சைவர்கள் இருப்பதால், இப்போது அவர்கள் (சைவர்கள்) தாழ்ந்தவர்களே ஆவர்" என்று கூறுகிறார்.
பிற சமயங்களில் வாழ்ந்தார் என்றால், வெறுமே அந்த சமயத்தவராய் இருக்காமல், அந்த சமயத்தின் கோட்பாடுகள், அவற்றைச் சார்ந்த நூல்கள் ஆகிய அனைத்திலும் புலமை பெற்றவராய் இருந்தார். அதனால்தான், வைணவராய் ஆனபின், மனதில் இருந்த அஜ்ஞானமானது (அறிவீனம்) பேயாழ்வாரால் விலக்கப்பட்டபின், பிற சமயத்தவர்களின் கோட்பாடுகள் அனைத்தும் வேதங்களுக்குப் புறம்பானவை - அதாவது, வேதங்கள் என்ன உரைக்கின்றதோ அவற்றுக்கு முற்றிலும் மாறுபட்டவை என்பதை தைர்யமாக எடுத்துரைத்தார். அதனால்தான், வேதங்களின் அர்த்தங்களை மறுதலித்தோ (மறுப்பது) அல்லது மாற்றிப் பொருள் கூறி, பகவானைப் (விஷ்ணுவை) புறக்கணிப்பவர்களை வெறுத்ததோடு மட்டுமின்றி, அவர்கள் அப்படி இருப்பதைத் தைர்யமாக எதிர்த்துப் பேசினார் தனது பிரபந்தங்களில்.
மேலே உள்ள பாசுரத்தில், சமணர்களையும், பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களையும், சைவர்களையும் இவ்வாழ்வார் ஏசியிருக்கிறார் என்றால், அது அவர்கள் விஷ்ணுவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, அவரை ஒரு கடவுளாகவே கருதவில்லை. விஷ்ணுவைத் தவிர வேறு எவரையும் வேதங்கள் தெய்வம் என்று பேசவில்லை என்ற உண்மையை நன்கு அறிந்தபின்தான் ஆழ்வார் தன் நாக்கையே கத்தியாக்கி பிற சமயங்களின் ஆதிக்கத்தை வெட்டி எறிந்தார். கீழே உள்ள பாடலில் ("நான்முகன் திருவந்தாதி", பாசுரம் 2)
"தேருங்கால் தேவன் ஒருவனே என்றுரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை - ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள்முடிவது ஆழியான்பால்."
என்று பாடியுள்ளார். இதன் அர்த்தம், 'ஹரி' என்றுசொல்லப்படுபவனான நாராயணனே பரம்பொருள் என்று பலவிதமான காரணங்களால் ஞானிகள் கூறுவர். அவனது (நாராயணன்) பெருமையை யாரும் உள்ளபடி அறியமாட்டார்கள். வேதத்தில் உள்ள பொருள்களின்படி (அர்த்தங்கள்) ஆராய்ந்து பார்த்தாலும், இதுதான் உண்மை என்று புரியும். எந்த விதமான தவத்தைப் புரிந்தவர்களுக்கும், அதன் முடிவான பலன் எம்பெருமானாலேயே (திருக்கைகளில் சக்கரத்தை ஏந்தியவன்) கொடுக்கப்படுகிறது" என்பதாகும்.
அடுத்து, விஷ்ணுவுக்கு நிகரான (சமமான) இன்னொரு தெய்வம் கிடையாது என்பதை,
"ஆறுசடைக்கரந்தான் அண்டர்க்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே - வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து." (நான்முகன் திரு., பாடல் 3)
இதன் அர்த்தம், "கங்கை நீரைத் தன் ஜடா மண்டலத்தில் (தலையில்) மறையச்செய்து தாங்கிக்கொண்டிருக்கின்ற ருத்ரனை (சிவன்), தேவாதிதேவனான எம்பெருமானோடு சமப்படுத்தி சொல்லும் சொல்லை (கொள்கையை) எப்படி ஏற்றுக்கொள்வது? வேறு எந்த தெய்வமும் தனக்கு ஒப்பாக (சமமாக) இல்லாமல் இருப்பவனும், எந்தப் பொருளைச் சொல்லுகிற சப்தமும் (அதாவது, மற்ற தெய்வங்களைத் துதிக்கும் சொல் எதுவானாலும்), அந்த சப்தங்களெல்லாம் தனக்கே என்று ஏற்றுக்கொள்பவனாய் இருப்பவனனுமான எம்பெருமானின் பெருமைகளைப் பற்றி சுருங்கப் பேசினேன்"என்பதாகும்.
பொதுவாக அரியும் (விஷ்ணு) சிவனும் ஒன்று என்ற கருத்து மேலோங்கி நிற்கின்றது. இந்தக் கருத்தை, இந்தப் பாசுரத்தின் மூலம் அறவே தகர்த்தெறிகிறார் திருமழிசை ஆழ்வார். ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற்கடவுள் என்றும், இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் படைப்பதால் அவனே ஜகத் காராணன் என்றும் கடந்த பகுதியில் ஒரு பாடலின் ("நான்முகனை நாராயணன் படைத்தான்.....") மூலம் அனுபவித்தோம். அவனால் படைக்கப் பட்டவர்களில் பரமசிவனும் ஒருவர் ஆவார். ஆக, படைக்கப் பட்டவரான பரமசிவன் எப்படி படைப்பவரான விஷ்ணுவுக்கு சமம் ஆவார்? என்பதே இந்தப் பாசுரத்தின் கேள்வியாயும், அதே சமயம் அப்படி இருவரையும் சமமாகக் கருதக் கூடாது என்ற பதிலாயும் இருக்கிறது.
"அந்தப்ரவிஷ்டஸ்ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா" (யஜுர் வேதம், ஆரண் 3-11-21) - என்று வேதம் உரைக்கிறது. அதாவது, ஸர்வாந்தர்மியான நாராயணன் ஜனங்களை உள்நுழைந்து நியமிக்கிறான் என்று கூறப்பட்டுள்ளதால், எல்லோரும் அவனுக்கு உடல்களே என்பது அறியப்படுகின்றது. அதுபோல, ஒருவன் உடல் என்றால், மற்றொருவன் (எம்பெருமான்) ஆத்மா என்பது நன்கு அறியப்படுகின்றது.
சூரியன் இருக்கும்போது நக்ஷத்ரங்கள் இருந்தாலும், அவை இல்லாதது போலவே ஒருவர்க்கும் தெரியாமல் இருக்கும். அதுபோலவே, எம்பெருமானுடைய மேன்மை காரணமாய் அவனுக்கு முன்னே எல்லாப் பொருள்களும் இருந்தாலும், இல்லாதது போலவே தோன்றும். மற்ற எல்லாப் பொருள்களைச் சொல்லும் சொற்களும், தனக்கே வசமாகும்படி அவை அனைத்தும் தனக்குப் ப்ரகாரமாக இருக்கின்ற படியைக் காட்டி, என்னை அடிமை கொண்டவனை (எம்பெருமானை) சுருங்கச் சொன்னேன் (விளக்கினேன்) என்கிறார் ஆழ்வார்.
ஏதோ இவ்வாழ்வார் மற்ற சமயங்களை எதிர்த்துப் பேசுவதற்காகவே பிறந்தார் என்று பேசுவது அநர்த்தம் ஆகும். இது அர்த்தமற்ற பேச்சு. மற்ற பகுதிகளில் இவரது பாடல்களையும் அதன் அர்த்தங்களையும் சிறிது சிறிதாக அனுபவிக்க, ஆழ்வார் நிலை என்ன என்பது தெளிவாகப் புரியும்.

No comments:
Post a Comment