அருளிச்செயல் அனுபவம்


என்றும் திருமேனி நீதீண்டப் பெற்று!!



    படம்: திருப்புல்லாணி தர்ப சயன ராமர்


பழுதே பல பகலும் போயின என்று அழுத ஆழ்வார், 'நம்மைப்போல் எல்லாரும் ஏமாந்தவர்கள் தானே, அன்றி யாரவது எம்பெருமானை ஒரு நொடிப்பொழுதும் விடாது அனுபவிக்கபெற்றவர்கள் உண்டோ' அன்று ஆராய்ந்து பார்த்தார்; "மாகடல் நீருள்ளான் " என்கிறபடியே ஸமுத்ரத்தில் ர்வகாலமும் எம்பெருமான் திருக்கண்வளர்ந்தருளும் செய்தி நினைவுக்கு வந்தது; ஹா ! ஹா !! ஸமுத்ர ராஜனுடைய பாக்கியமே பாக்கியம்; ஒரு நொடிப்பொழுதும் விடாமல் எம்பெருமானது திருமேனியைத் தீண்டப்பெற்றிருக்கிறானன்றோ என்று அணுஸந்தித்து அக்கடல் தன்னையே நோக்கி 'இப்படி உனக்குப் பகவதனுபவம் நித்யமாய்ச் செல்லும்படி நீ என்ன நோன்பு நோற்றாய்  கொல்?' என வினவுகின்றார். நீ நோற்ற நோன்பைச் சொல்லுவாயாகில் நானும் அந்த நோன்பை நோற்று இப்பேறு பெறுவேன் கான் என்பது உள்ளுறை.

-காஞ்சி ஸ்வாமி (முதல் திருவந்தாதி - பாசுரம் 19)