ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ அருளாளப்பெருமாள் எம்பெருமானார் வைபவம்
திருநக்ஷத்திரம் : கார்த்திகை மாதம் பரணீ நக்ஷத்திரம்
தனியன்:
ராமாநுஜார்ய
ஸச்சிஷ்யம் வேதஸாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுஸ்ரார்த்தம
ஸம்பதம் தேவராஜமுநிம் பஜே ||
விளக்கம் : எம்பெருமானாருடைய
(இராமாநுசர்) நல்ல சீடராய், வேதஸாஸ்த்ரார்த்தப்
பொருள்களைச் (அர்த்தங்களை) செல்வமாக உடையவராய், ஸந்யாஸ்ரமத்தை உடையவரான தேவராஜ முனிவர் என்னும்
அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை ஆச்ரயிக்கிறேன் (ஆசாரியராக ஏற்றுக் கொள்கிறேன்).
வட
நாட்டில் கார்த்திகை மாதம் பரணீ
நக்ஷத்ரத்தில் பிறந்த யஞ்ஞமூர்த்தி என்னும் பெயரை கொண்ட இவர் அத்வைதியாக வாழ்ந்து
வந்தார். பெரும் ஞானம் படைத்தவரான
இவர் ஓர் நாள் காவிரிக் கரையில் நீராடிவிட்டுத் திரும்பும் போது
இராமநுசரின் பெருமைகளை அறிந்து கொண்டார். பின் தான் அனைத்து சாஸ்திர
வாக்யங்களையும் எழுதிக்கொண்டு மூட்டைகட்டி நேரே இராமாநுசரிடம் சென்று
"என்னுடன் தர்க்கிக்க வேண்டும்(அதாவது என்னுடன் வாதாட வேண்டும்)"
என்றார். இதை கேட்ட இராமநுசர் சரி என்று சொல்லி, நீர் நம்மிடத்தில்
(என்னிடத்தில்) வாதத்தில் தோற்றால் என்ன
செய்வீர் என்று கேட்டார், அதற்கு யஞ்ஞமூர்த்தி நான் தோற்றால் அனைத்தையும் துறந்து உம்
திருவடிகளில் புகக் கடவேன் (சரண் அடைவேன்) என்றார்( என்றும் உம்மை ஆசாரியனாக ஏற்று கொள்வேன்
என்றும் அத்வைதத்தைத் துறந்து
விஷிஷ்டாத்வைதத்தை ஏற்று அதன்படி வாழ்வேன் என்றும் வாக்களித்தார். இராமாநுசரும் தாம்
தோற்றால் க்ரந்த சன்யாசம்( செய்வேன் - அதாவது, இனி எந்த நூலும் இயற்ற
மாட்டேன் என்று வாக்களித்தார். அதன்பின், சரி என்று இருவரும் ஒப்புக் கொண்டு
வாதத்தைத் தொடர்ந்தனர். பதினாறு
நாட்கள் கழிந்தன, இருவரும் அவரவர் மதத்தில் யானையை போல் வாதம்
செய்தனர். பதினேழாம் நாள் யஞ்ஞமூர்த்தி வாதத்தில்
தனது வாக்கை வெளியிட இராமனுசர்
மறு வாதம் இல்லாமல் திகைத்து நிற்க, அடுத்த நாள் வந்து
காண்போம் என்பதற்காக இருவரும் கிளம்பினர். அன்று இராமானுசர் தம் மடத்திற்கு சென்று
அவருடைய திருவாராதனப் பெருமாளான பேரருளார்க்கு (ஸ்ரீ வரதராஜர்) திருவாராதனம்
செய்து விட்டு அவர்க்குப் பிரசாதம் கண்டருளச்
செய்துவிட்டு, பின் அவரிடம்
"நம்மாழ்வார் தொடங்கி
ஆளவந்தார் ஈராக வளர்ந்து வந்த இந்த (ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம்
அல்லது விசிஷ்டாத்வைதக் கொள்கை)) சம்பிரதாயம், இன்று ஒரு மதவாதி இடத்தில் என்னால் அழிந்து விடும் போல் தெரிகிறதே!! இதுவே உன்
லீலையானால் அவ்வாறே நடக்கட்டும் என்று" பகவானிடத்தில் கூறி தான் உண்ணாமல்
உறங்கினார். பின் அருளாளப்பெருமாள் இராமானுசர் கனவில் தோன்றி ஆளவந்தார்
அருளிச்செய்த வார்த்தை ஒன்றை இராமநுசருக்கு நினைவூட்டினார். காலை எழுந்தவுடன்
இராமானுசர் எப்படி இவ்வாறு ஒரு கனவு நடந்தது என்று திகைத்து நின்று, பின் குளித்து தன் அனுஷ்டானங்களை (சந்த்யவந்தனாம் , ஆராதனம் ஆகியவைகளை)) முடித்து கொண்டு யஞ்ஞமூர்த்தியிடம்
வாதாடுவதற்காக விரைந்து தைர்யத்துடன் சென்றார். இராமாநுசர் வரும் வேகத்தை கண்ட யஞ்யமூர்த்தி இராமநுசர் திருவடிகளில்
விழுந்து "அடியேனை மன்னித்து உம்முடன் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று
வேண்டினார்", இராமாநுசர் அவரைக்கண்டு இது என்னவென்று கேட்க யஞ்ஞமூர்த்தி அதற்கு "பெரிய பெருமாள்
(ஸ்ரீரங்கநாதர்) கனவில் வந்து தங்களுக்கு
அருள் செய்து விட்டார் , பின் உம்மை யாரால் வெல்ல முடியும்" என்று கூறி, இராமாநுசர் திருவடிகளில் விழுந்து, அவரை ஏற்று கொள்ளும்படி வேண்டினார். இராமநுசர் சரி என்று கூறி
அவரை ஏற்றுக்கொண்டு, அவருக்கு சிகை மற்றும் பூணுல் விவரணம் செய்து, பின் அவர் இராமானுசர் இடத்தில் அவர் ஏக தண்டத்தை
(அத்வைதத்தை )துறந்து, த்ரிடந்தத்தை (விஷிஷ்டாத்வைதத்தை) ஏற்று, சன்யாச தர்மத்தை ஏற்றார்.
பின், நம்பெருமாள் இடத்திலே தீர்த்தம் மற்றும்
சடாரி பெற்றுவித்து கொடுத்தார். பின், அவர் இராமாநுசர் இடத்தில் நாலாயிர திவ்யப்ரபந்தத்தைக் கற்றார். பின் அவருக்குப் பெயர் சூட்டினார்.
பேரருளாளர் மற்றும் இராமநுசர் திருவருரால் திருந்திய
இவருக்கு அருளாளப்பெருமாள்
எம்பெருமானார் ஜீயர் என்ற திருநாமத்தைச் (பெயர் இடுவது) சூட்டினார். அவரும் தனியே ஒரு மடத்தை
அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். பின் அனந்தாழ்வான், எச்சானும், தொண்டனூர் நம்பியும், மருதூர் நம்பியும் இராமாநுசர் திருவடிகளில் விழுந்து
வணங்கி,
அவரைத் தங்களுக்கு ஆசாரியனாய் இருக்க
வேண்டும் என்று விண்ணப்பிக்க (கேட்க) அதற்கு இராமாநுசர் நீங்கள்
சென்று அருளாளப்பெருமாள்
எம்பெருமானார் திருவடியை பற்றுங்கோள் என்று கூறினார். இதை கேட்ட அருளாளப்பெருமாள் எம்பெருமானார் அவர்களுக்கு
பஞ்ச சம்ஸ்காரம் செய்து விட்டு "குருவியின் கழுத்திலே பனங்காயை கட்டினார்போலே
இராமாநுசர் உங்களை என்னைப் பற்ற சொன்னார் "
எனினும் நீங்கள் அவரையே தஞ்சமாக கொள்ளுங்கள் என்று கூறினார்.. சில காலங்கள் சென்றபின், ஒரு நாள் திருவரங்குத்துக்கு
வந்த இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானார் (இராமாநுசர்) மடம் எங்கே இருக்கிறது
என்று கேட்டனர். அதற்கு அங்கு இருந்தவர்கள் எந்த எம்பெருமானார் மடம் என்று கேட்டனர். இது என்ன இரண்டு எம்பெருமானார் மடம் உண்டோ என்று அவர்கள் கேட்க, அதற்கு அங்கு இருந்த மக்கள் ஆம் ஒன்று எம்பெருமானார்
(இராமாநுசர்) மடம்; மற்றொன்று அருளாளப்பெருமாள் எம்பெருமானார் மடம் என்று
கூறினார்.. இதை கேட்ட வைணவர்கள் நாம் எம்பெருமானார் (இராமாநுசர்) ஒருவரையே அறிவோம் மற்றும் அருளாளப்பெருமாள் எம்பெருமானாரை அறிய மாட்டோம் என்றனர். இதை
அறிந்த அருளாளப்பெருமாள்
எம்பெருமானார் ஜீயர் இது என்ன நம்மை அப்பேற்பட்ட எம்பெருமானருடன் எதிர் தட்டில்
(சமமாக) வைத்துப் பேசினார்கள்
என்று நினைத்து, அப்பொழுதே தம் மடத்தை இடித்து, இராமநுசர் இடம் சென்று இதை கூறி, எம்பெருமானார் மடத்திலேயே இருக்க அனுமதி கேட்டார்.
எம்பெருமானாரும் ஒப்புக்கொண்டு, அவருக்கு அனைத்து வேதவாக்யங்களையும்
கற்றுக்கொடுத்து அவரை நம் தர்மத்துக்க்காகவே ஆக்கினார். அனைத்து வேதாந்தங்களையும் கற்ற இவர் ஒரு பேதையும்
பெண்ணும் கூட சுலபமாக உஜ்ஜிவிக்கலாம் படியாக "ஞானசாரம்" மற்றும்
"ப்ரமேயசாரம்" என்னும் இரண்டு பிரபந்தங்களின் வழியே ஒரு
சிஷ்யனுக்கு தன் ஆசாரியனே தெய்வம் என்றார். ஆசாரியனுக்கு சேவை
(தொண்டு) செய்வதே சிஷ்யனின் கடமை என்றும் கூறினார். ஆசாரியனே பகவானின் அவதாரம் என்பதை
சந்தேகத்திற்கு இடமின்றி நியமித்தார். இவர் அடியார்களுக்கு இன்றும்
மதுரகவி தாசர்கள் என்றும் திருமலை விஞ்சிமூர் வம்சம் என்றும் பெயர் உண்டு.
திருநக்ஷத்திரத்
தனியன்
கார்த்திகே
பரணீஜாதம் யதீந்திராஸ்ரிதம் ஆஸ்ரயே |
ஜ்ஞான
ப்ரமேய ஸாராபிவந்தாரம் வரதம் முநிம் ||
விளக்கம் : கார்த்திகையில் பரணி
நக்ஷத்திரத்தில் அவதரித்தவராய், யதிராஜரை (இராமாநுசர்)
ஆச்ரயித்தவராய், ஞானசார, ப்ரமேயசாரங்களை அருளியவரான அருளாளப்பெருமாள் எம்பெருமானாரை
ஆச்ரயிக்கிறேன்.
நித்யதனியன் :
ஜ்ஞானபக்த்யாத்த
வைராக்யம் ராமாநுஜ பதாஸ்ரிதாம் |
பஞ்சமோபாய
ஸம்பந்தம் ஸம்யமீந்த்ரம் நமாம்யஹம் ||
விளக்கம் : ஞானபக்திகளால் உண்டான
வைராக்கியத்தை உடையவரும், ஸ்ரீராமாநுஜரின் திருவடியை
ஆஸ்ரயித்தவரும், அவரிடம், பஞ்சமோபாய நிஷ்டையை உடையவருமான அருளாள
மாமுனிவரை அடியேன் (நான்) வணங்குகிறேன்.
ஸ்ரீ
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் வாழி திருநாமம் :
அருளாள
மாமுனிவன் அடியிணைகள் வாழி
அரை
அமர் செந்துவருடயினோடுஅணி யுந்தி வாழி
அருலாரும்
அங்கை ஓடு முக்கௌம் வாழி
அணி
வடங்கள் புரிநூலோடு ஆகமது வாழி
தெருலாழி
சங்கமோடு திருத்தோல்கள் வாழி
திருக்கானநின்னை
நாமமது சேருதலும் வாழி
போருலாறு
நற்கலைகள் புகழ் நாவும் வாழி
ப்ங்கேழில்
தூமாளைபுனை போற்குஞ்சி வாழி
திருவாழும்
தென்னரங்கம் சிறக்கவந்தோன் வாழியே
தேனருளாளர்
அன்பால் திருந்தினான் வாழியே
தாருவாழும்
எதிராசன் தாழ் அடைந்தோன் வாழியே
தமழ்
ஞான பிரமேய சாரம் தாமர்க்குரைப்பொன் வாழியே
தெருலாறு
மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு
போலி மடந்தன்னை சிதை திட்டான் வாழியே
அருளாள
மாமுனியாம் ஆரியன் தாழ் வாழியே
அருள்
கார்த்திகை பரணியோன் அனைதூழி வாழியே
ஸ்ரீ அருளாளப்பெருமாள் எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே
சரணம்.
No comments:
Post a Comment